ஆப்நகரம்

பத்மாவதி சரித்திரப் படமா?: தணிக்கைக் குழு கேள்வி

பத்மாவதி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கான காரணத்தை தணிக்கைக்குழு உறுப்பினர் மல்லிகா கூறியுள்ளார்.

TNN 21 Nov 2017, 3:09 pm
பத்மாவதி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கான காரணத்தை தணிக்கைக்குழு உறுப்பினர் மல்லிகா கூறியுள்ளார்.
Samayam Tamil why cbfc refused to certify padmavati
பத்மாவதி சரித்திரப் படமா?: தணிக்கைக் குழு கேள்வி


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற பாலிவுட் வரலாற்றுத் திரைப்படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஷாகித் கபூர் ராணா ரத்தன் சிங் வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜி வேடத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புட் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், டிசம்பர் 1ஆம் தேதி படம் வெளியாவது ஒத்திப்போடப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு, தணிக்கைக் குழுவின் சான்றிதழும் மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே நாடு முழுவதும் இப்படத்திற்கு எதிரான கருத்துக்கள் வலுத்துள்ளன.

இந்நிலையில், தணிக்கைக் குழு உறுப்பினர் மல்லிகா பத்மாவதிக்கு சான்றிதழ் வழங்க மறுத்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். “பத்மாவதிக்கு அலாவுதீன் கில்ஜி மீது காதல் இருப்பது போல் காட்சிகள் இருந்தால் நீக்க வேண்டும். கற்பனையாகக்கூட இதுபோன்ற காட்சிகளை வைப்பது கூடாது என்று ராஜ்புட் சமுதாயத்தினர் வலியுறுத்துகின்றனர். இப்படிப்பட்ட காட்சிகள் நீக்கப்பட வேண்டுமென்பதே எனது கருத்தும். பத்மாவதி சரித்திரப் படமா? கற்பனைப் படமா? என்று படக்குழு கூறவில்லை. இதுவே சான்றிதழ் அளிக்க மறுத்திருப்பதற்கான காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்