ஆப்நகரம்

'இதனால்' தான் ப்ளூ சட்டை திரௌபதியை விமர்சிக்கலயாம்: டைரக்டரே சொல்லிட்டார்

எந்த படம் ரிலீஸானாலும் முதல் ஆளாக விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன் ஏன் திரௌபதி படத்தை விமர்சிக்கவில்லை என்று கேட்டவருக்கு பதில் அளித்துள்ளார் இயக்குநர் மோகன்.

Samayam Tamil 5 Mar 2020, 1:22 pm
எந்த படம் ரிலீஸானாலும் முதல் ஆளாக விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன் ஏன் திரௌபதி படத்தை விமர்சிக்கவில்லை என்று கேட்டவருக்கு பதில் அளித்துள்ளார் இயக்குநர் மோகன்.
Samayam Tamil why does that reviewer didnt say anything about draupathi mohan explains
'இதனால்' தான் ப்ளூ சட்டை திரௌபதியை விமர்சிக்கலயாம்: டைரக்டரே சொல்லிட்டார்


திரௌபதி

மோகன் இயக்கத்தில் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரௌபதி படம் குறித்து தான் இன்னும் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. படம் குப்பை, சாதி வெறியை தூண்டுகிறது என்று ஒரு கூட்டமும், பெண் பிள்ளைகளை பெற்ற அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்று ஒரு கூட்டமும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் எப்படி திரௌபதியை விமர்சிக்காமல் இருக்கிறார் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.

ப்ளூ சட்டை மாறன்

எந்த படம் வந்தாலும் அதை கிழிச்சு தொங்கவிடவில்லை என்றால் இந்த ப்ளூ சட்டைக்கு தூக்கம் வராதே. அந்த ஆள் எப்படி திரௌபதி படத்தை கண்டுக்காம விட்டார் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. இந்நிலையில் ப்ளூ சட்டை பற்றிய ட்வீட்டை பார்த்த மோகன் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, அண்ணன் இயக்குனர் ஆகிட்டாரு.. அதான் னா.. நல்லா வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Twitter-Mohan G 🔥😎

மோகன்

மோகன் அளித்த பதிலை பார்த்த திரௌபதி ஆதரவாளர்களோ, ப்ளூ சட்டைக்கு எல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் ப்ரோ. அந்த ஆளு நம்ம படத்தை பற்றி நிச்சயம் நல்லவிதமாக சொல்ல மாட்டார் என்று தெரிவித்துள்ளனர். திரௌபதி எதிர்ப்பார்களோ, உங்கள் படத்தை ஒரு விஷயமாகவே ப்ளூ சட்டை மதிக்கவில்லை போன்று கிண்டல் செய்துள்ளனர்.

விமர்சனம்

தன் படத்தை பற்றி வரும் விமர்சனங்களுக்கு தொடர்ந்து பதில் அளித்து வருகிறார் மோகன். இதை பார்ப்பவர்கள், திரௌபதி படத்தை எடுக்க காசு கொடுத்தது யார் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் சும்மா கூவ வேண்டாம். நல்ல படத்தை எடுத்தவர் போன்று ஏன் இந்த ஆட்டம் ஆடுகிறீர்கள். நாவடக்கம் முக்கியம் சகோதரரே என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்