ஆப்நகரம்

இரண்டாவது திருமணம் செய்யப்போகும் 43 வயதான நடிகை!

43 வயது நிறைந்த பிரபல நடிகை கரிஷ்மா கபூர் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 8 Jun 2018, 5:34 pm
43 வயது நிறைந்த பிரபல நடிகை கரிஷ்மா கபூர் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.
Samayam Tamil karisma-kapoor-sandeep-toshniwal


பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கரிஷ்மா கபூர். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்தே பல கிசுகிசுக்களில் சிக்கி வந்துள்ளார். இவர் முதலில் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்தார். பின்னர் நடிகர் அபிஷேக் பச்சனுடன் நிச்சயதார்த்தம் செய்து, அது திருமணம் வரை சென்று நின்றுவிட்டது. அதன் பின் கரிஷ்மா சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரது வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் பல உள்ளன. இந்நிலையில் 2014ல் கரிஷ்மா கபூர் தன் கணவர் சஞ்சய் கபூரை விவாகரத்து செய்தார். தற்போது கரிஷ்மாவுக்கு 43 வயதாகிறது. இந்நிலையில் அவர் சந்தீப் தோஸ்னிவால் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கபடுகிறது. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இதுகுறித்து அவர் தந்தை ரன்திர் கபூரிடம், ‘‘கரிஷ்மா கபூர் விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் சமீபத்தில் பரவி வருகிறது அது உண்மையா’’ என்று கேட்டதற்கு அவர் அது வெறும் வதந்தி என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்