ஆப்நகரம்

ரஜினியின் மெளனத்தின் காரணம் என்ன டி,ஆர் கேள்வி

அரசியலுக்கு வருவதாக கூறிக்கொள்ளும் ரஜினிகாந்த் ஜிஎஸ்டி பற்றி ஏன் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 1 Jul 2017, 3:32 pm
அரசியலுக்கு வருவதாக கூறிக்கொள்ளும் ரஜினிகாந்த் ஜிஎஸ்டி பற்றி ஏன் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil why rajinikanth is silent on gst asks t rajendar
ரஜினியின் மெளனத்தின் காரணம் என்ன டி,ஆர் கேள்வி


நாடு முழுவதும் ஜிஎஸ்டி குறித்து மக்களும் அரசியல் பிரமுகர்களும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு பக்கம் ஜிஎஸ்டிக்கான ஆதரவும் மறுபுறம் எதிர்ப்பும் வலுத்துவருகிறது. இந்த நிலையையில் அரசியலுக்கு வருவதாக சொல்லும் ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவிக்காதது ஏன் என்று டி . ராஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ''உங்களை வாழ வைத்த சினிமாவுக்கு குரல் கொடுக்காதது ஏன். ஏன் ஜிஎஸ்டி குறித்து ரஜினிகாந்த் மெளனம் காத்து வருகிறார். திரைத்துறைக்கே குரல் கொடுக்காத ரஜினிகாந்த் எப்படி அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பார். ஜிஎஸ்டி குறித்து கமல் ஹாசன் தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.

அரசியல்வாதிகள் சேவை செய்து கொண்டு இருக்கும்போது எதற்கு சேவை வரி விதிக்கப்படுகிறது. சினிமா டிக்கெட் விலையை உயர்த்துவதில் நான் முரண்படுகிறேன்'' என்றார்.

ஜிஎஸ்டி நிறைவேற்றப்படும் நேரத்தில் ரஜினிகாந்த் இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிகிச்சை எடுக்கவும், எந்திரன் 2 நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவும் அமெரிக்கா சென்றுள்ளார்.

why rajinikanth is silent on gst asks t rajendar

அடுத்த செய்தி

டிரெண்டிங்