ஆப்நகரம்

‘தர்மதுரை’ விழாவுக்கு தமன்னா வராததுக்கு யார் காரணம்?

நடிகை தமன்னா ‘தர்மதுரை’ பட விழாவிற்கு வராததற்கு தயாரிப்பாளர்தான் காரணம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

TOI Contributor 3 Jan 2017, 5:48 pm
நடிகை தமன்னா ‘தர்மதுரை’ பட விழாவிற்கு வராததற்கு தயாரிப்பாளர்தான் காரணம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
Samayam Tamil why tamanna didnt come to dharma durai 100 day function
‘தர்மதுரை’ விழாவுக்கு தமன்னா வராததுக்கு யார் காரணம்?


சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியான படம் - ‘தர்மதுரை’. இந்தப் படத்தின் 100வது நாள் சென்னையில் கொண்டாடப்பட்டது. படத்தை ஸ்டுடியோ-9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார். ‘தர்மதுரை’ படத்தின் 100-வது நாள் விழாவில், அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் விநியோகஸ்தர்களும் பங்குபெற்றனர். ஆனால் ‘தர்மதுரை’ நாயகியான தமன்னா மட்டும் விழாவுக்கு வரவில்லை. காரணம் என்னவென்று விசாரிக்கையில் கடந்த காலத்தில் தமன்னாவுக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள்தானாம்.

‘தர்மதுரை’ பட ஷூட்டிங்கின்போது , கால் ஷீட்டில் நடிகை தமன்னா சொதப்பினாராம். இதனால் தர்மதுரை தயாரிப்பாளர்கள் கடுப்பாகி விட்டார்களாம். படம் வெளியான நேரத்தில் புரமோஷனுக்கு தமன்னாவை அழைத்தாராம் தயாரிப்பாளர். அப்போதும் அலட்சியப்படுத்தினாராம் தமன்னா. எனவே தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் தமன்னா மீது புகார் கொடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர். இந்த கசப்பான சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் ‘தர்மதுரை’ விழாவிற்கு தமன்னா வரவில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் பேசிக் கொள்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்