ஆப்நகரம்

சீக்கிரமே நடக்கப்போகுது ஜெய்-அஞ்சலியின் காதல் திருமணம்!

ஜெய் & அஞ்சலியின் காதல் திருமணம் எப்போது என்று திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

TNN 29 Mar 2017, 7:46 pm
ஜெய் & அஞ்சலியின் காதல் திருமணம் எப்போது என்று திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
Samayam Tamil will be soon anjali and jai marriage
சீக்கிரமே நடக்கப்போகுது ஜெய்-அஞ்சலியின் காதல் திருமணம்!


தமிழ் திரையுலகில் அஜித்&-ஷாலினி, சூர்யா&-ஜோதிகா, பிரசன்னா&-சினேகா நட்சத்திர ஜோடி போல் இன்னொரு நட்சத்திர ஜோடியான ஜெய்-&அஞ்சலி உருவாகவுள்ளதாக கடந்த சில நாட்களாக வதந்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த வதந்தியை இரு தரப்பினர்களும் மறுக்காததால் இதில் உண்மை இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அஞ்சலி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஆறு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார். மேலும் ஜெய்-அஞ்சலி தற்போது நடித்து முடித்திருக்கும் ‘பலூன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தவே ஜெய்-&அஞ்சலி காதல் மற்றும் திருமண வதந்தியை படக்குழுவினர்களே பரப்பி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘ராஜாராணி’ படம் வெளியாகும் நேரத்திலும் ஆர்யா-&நயன்தாரா திருமணம் குறித்து இதேபோல் ஒரு வதந்தி பரவி, பின்னர் அது அந்த படத்திற்கான விளம்பரம் என்பது வெட்டவெளிச்சமானது என்பது தெரிந்ததே.

இருப்பினும் அஞ்சலி தற்போது கையில் உள்ள படங்களை முடிக்க 2018ஆம் வருடம் இறுதி வரை ஆகும் என்பதால் ஜெய்-&அஞ்சலி காதல் வதந்தியா? அல்லது இல்லற வாழ்வில் இணையபோகும் இன்னொரு நட்சத்திர ஜோடியா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்