ஆப்நகரம்

தெலுங்கில் நானியுடன் டூயட் பாடும் பிரகாஷ் வாரியர்!

பிரபல மலையாள நடிகை பிரகாஷ் வாரியர், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நானிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 28 Jan 2019, 4:48 pm
‘ஒரு அடார் லவ்’ என்ற படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவரது முதல் படத்திலேயே இவர் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்தப் படம் பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த படம் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகிறது. இந்த படம் தெலுங்கில் ‘லவ்வர்ஸ் டே’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.
Samayam Tamil nani-pariya


மேலும், இந்த படத்தின் புரமோஷனுக்காக பிரியா வாரியர் ஐதராபாத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவரை டைரக்டர் விக்ரம் குமார் சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பில், நானியை வைத்து தான் இயக்கவிருக்கும் தெலுங்கு படத்திற்கு பிரியா பிரகாஷ் வாரியரை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார் விக்ரம் குமார்.

‘பிரேமம்’ படத்தை அடுத்து சாய் பல்லவி தெலுங்கில் என்ட்ரி கொடுத்தது போன்று இப்போது பிரியா பிரகாஷ் வாரியரும் ‘ஒரு அடார் லவ்’ படத்தை அடுத்து தெலுங்கு படத்தில் முதன் முறையாக ஒப்பந்தமாகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்