ஆப்நகரம்

Petta in Tamilrockers:ரஜினியின் பேட்ட படம் தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் கசிந்ததா?

பேட்ட படம் நேற்று வெளியாகி ரஜினி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தை இணையத்தில் தமிழ் ராக்கர்ஸில் வெளியிடுவார்களா என்று கேள்வி எழுந்த நிலையில் இணையத்தில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Jan 2019, 10:54 am
பேட்ட படம் நேற்று வெளியாகி ரஜினி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தமிழ் ராக்கர்ஸில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil pettai


கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட படம் இன்று திரைஅரங்குகளில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. பேட்ட படம் எப்படி இருக்கிறது என விமர்சகர்கள் ஒருபக்கம் ஆன்லைனில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியாகிய 2.0 முதல் பல பெரிய பட்ஜெட் படங்கள் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரஸி தளத்தில் ஹெச்டி தரத்தில் பதிவேற்றப்படுகின்றன. இதற்கும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளதை மறுக்க முடியாது. இவற்றை ஒருவர் தனது மொபைலில் பதிவிறக்கம் செய்தால் மற்றவர்களுக்கு ஷார் இட் மூலம் பகிரப்படுகிறது. இவ்வாறு இளைஞர்கள் பலர் வேகமாக பகிர்ந்து படங்களை தங்கள் மொபைல்களிலேயே பார்த்துவிடுகின்றனர்.

இதனைத் தடுக்க தமிழக அரசு சீறிய முயற்சி மேற்கொண்டது. இதுபோன்ற தளங்களை முடக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அவர்கள் வெவ்வேறு டொமைன்களில் இயங்கி செயல்படுகிறார்கள்.

மேலும் வெளிநாடுகளில் படங்கள் வீடியோ எடுக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப் படுகிறது.
சமீபத்தில் சன் பிச்சர்ஸ் நிறுவனம் இதுதொடர்பாக நீதிமன்ற உதவியை நாடியது. ஆன்லைன் பைரசிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றிலும் தடை விதித்தலும் இவர்கள் அடங்குவதில்லை.
இதேபோல பேட்ட படமும் தமிழ்ராக்கர்ஸில் வெளியாக வாய்ப்புள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.

Disclaimer: டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (சமயம்) திருட்டு வீடியோக்களையும், திருட்டு படங்களையும் பதிவிறக்கம் செய்யும் இணையதளங்களை என்றுமே ஆதரிக்காது. இது செய்திக்காக மட்டுமே. விளம்பரத்திற்கானது அல்ல.

அடுத்த செய்தி

டிரெண்டிங்