ஆப்நகரம்

தெலுங்கில் ரெமோ, பதட்டத்தில் சிவகார்த்திகேயன்!

தெலுங்கில் வெளியாகியுள்ள ரெமோ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெறுமா என்று அந்தப் படக்குழு ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டுள்ளது.

TOI Contributor 26 Nov 2016, 4:12 pm
தெலுங்கில் வெளியாகியுள்ள ரெமோ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெறுமா என்று அந்தப் படக்குழு ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டுள்ளது.
Samayam Tamil will remo do well in the box office
தெலுங்கில் ரெமோ, பதட்டத்தில் சிவகார்த்திகேயன்!


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழில் உருவான படம் ‘ரெமோ’. இந்தப் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றி என்றே சொல்லாம். தமிழில் ‘ரெமோ’ படத்தின் வெற்றி மூலம் தன்னை மேலும் வளர்த்துக் கொண்ட சிவகார்த்திகேயன், தெலுங்குத் திரையுலகிலும் தற்போது கால் பதித்துள்ளார்.

தமிழில் உருவான ‘ரெமோ’ படம் தெலுங்கில் ‘டப்பிங்’ செய்யப்பட்டுள்ளது. இந்த ‘ரெமோ’ திரைப்படம் தற்போது ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெளியாகியுள்ளது. தமிழை விட தெலுங்கில் அதிகமாகச் செலவு செய்து விளம்பரப்படுத்தியுள்ளதை டோலிவுட்டே ஆச்சரியத்துடன் பார்க்கிறது. கடந்த சில நாட்களாகவே அங்கு வெளியாகும் நாளிதழ்களில் ‘ரெமோ’ படத்தின் அரை பக்க விளம்பரம், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என அனைத்திலும் வந்து கொண்டிருக்கிறதாம் நேரடித் தெலுங்குப் படங்களுக்குக் கூட இவ்வளவு செலவு செய்ய மாட்டார்களே, ஒரு டப்பிங் படத்திற்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.இருந்தாலும் சிவகார்த்திகேயன் தரப்பில் அதைப் பற்றியெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

தன்னுடைய தெலுங்கு திரையுலக அறிமுகம் குறித்து ஆர்வமாகவும், பதட்டமாக இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இவருடைய தெலுங்கு பிரவேசம் பிரகாசமாக இருக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்