ஆப்நகரம்

ரஜினி சொன்னது நடந்துடுச்சு, அப்படின்னா சிம்பு பற்றி டி.ஆர். சொன்னதும் நடக்குமா?

சிம்பு பற்றி அவரின் அப்பா சொன்னது நடக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Samayam Tamil 18 Feb 2020, 3:46 pm
சிம்பு பற்றி அவரின் அப்பா சொன்னது நடக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Samayam Tamil will t rajendars words about simbu come true soon
ரஜினி சொன்னது நடந்துடுச்சு, அப்படின்னா சிம்பு பற்றி டி.ஆர். சொன்னதும் நடக்குமா?


சிம்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் நாளை துவங்க உள்ளது. முன்னதாக முதல்கட்ட படப்பிடிப்பு கோவையில் துவங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு நடத்த உள்ளார்களாம். டி. ஆர் பேசியது மாநாடு படத்தை பற்றி அல்ல தன் மகனின் வாழ்க்கையை பற்றி.

திருமணம்

சிம்புவுக்கு 2020ம் ஆண்டு திருமணம் நடக்கும் என்று டி. ஆர். பேட்டி ஒன்றில் தெரிவித்தார். 38 வயதாகும் சிம்பு இன்னும் சிங்கிளாகவே உள்ளார். அவரின் தம்பி, தங்கைக்கு திருமணமாகி குடும்பத்துடன் உள்ளார்கள். இந்நிலையில் தான் தன் மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார் அப்பா டி.ஆர். அவர் ஆசையும் நியாயம் தான். சிம்புவுக்கு பெண் தேடும் படலம் நடந்து கொண்டிருக்கிறதாம்.

யோகி பாபு

சரி, அது என்ன ரஜினி சொன்னது நடந்துடுச்சு என்று கேட்கிறீர்களா?. வரும் தை மாசம் உங்களுக்கு திருமணம் நடக்கும் என்று ரஜினி தன்னிடம் கூறியதாக யோகி பாபு தர்பார் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். அதே போன்று யோகி பாபுவுக்கு திருமணம் நடந்துவிட்டது. 2020ம் ஆண்டில் சிம்புவுக்கு திருமணம் நடக்கும் என்று டி. ஆர். சொன்னதும் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மகத்

சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத்துக்கு கடந்த 1ம் தேதி தான் திருமணம் நடந்தது. சிம்பு முன் நின்று அந்த திருமணத்தை நடத்தி வைத்தார். அதை பார்த்து டி.ஆர். சந்தோஷப்பட்டிருக்கலாம். ஆனால் சிம்பு ரசிகர்களால் கோபத்தை அடக்க முடியவில்லை. சிம்பு மட்டும் சிங்கிளாகவே இருக்கணும், நீ மட்டும் கரெக்டா காதலிச்சு கல்யாணம் பண்ணுவ என்று ரசிகர்கள் திட்டினார்கள். சிம்பு விரைவில் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது டி. ஆர். மட்டும் அல்ல ரசிகர்களின் பிரார்த்தனையும் கூட.

அடுத்த செய்தி

டிரெண்டிங்