ஆப்நகரம்

சத்யம் சினிமாவில் சரித்திர சாதனை படைக்கும் ஹீரோ

விஜய் சேதுபதியின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவதால் சத்யம் சினிமாவில் சாதனை படைத்த ஹீரோவாகியுள்ளார்.

TNN 4 Oct 2016, 11:00 am
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய் சேதுபதி. பீட்சா படத்தின் மூலம் அனைவரும் அறியும் நாயகனாக திகழ்ந்தார். இப்படத்தை தொடர்ந்து நடுவுல் கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்கள் தொடர்ந்து விருது கிடைக்க முன்னணி ஹீரோக்களில் ஒருவரானார்.
Samayam Tamil will vijay sethupathi create a record in sathyam cinemas
சத்யம் சினிமாவில் சரித்திர சாதனை படைக்கும் ஹீரோ


சீனு ராமசாமி இயக்கத்தில் இவரது நடிப்பில் உருவான தர்மதுரை கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி திரைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கிய ’ஆண்டவன் கட்டளை’ கடந்த மாதம் 23ம் தேதி வெளிவந்தது. இந்நிலையில், ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி – லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள றெக்க வரும் 7ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சென்னை சத்யம் சினிமாவில் இவரின் முதல் இரண்டு படங்களும் நல்ல வசூல் படைத்துக்கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவது படமான றெக்க படமும் சத்யம் சினிமாவில் திரையிடப்படவுள்ளது. இந்த திரையரங்க வளாகத்தின் சரித்திரத்தில் ஒரே நடிகரின் மூன்று படங்கள் அடுத்தடுத்து திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும். இவ்வளவு ஏன்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட சத்யம் சினிமாவில் சாதனை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்