ஆப்நகரம்

Vijay மாஸ்டர் பொங்கலுக்காச்சும் ரிலீஸாகுமா?: இதோ லேட்டஸ்ட் அப்டேட்

விஜய்யின் மாஸ்டர் படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 4 Nov 2020, 2:48 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தை கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன.
Samayam Tamil master


இந்நிலையில் 8 மாதங்கள் கழித்து தியேட்டர்கள் வரும் 10ம் தேதி திறக்கப்படுகின்றன. இதனால் மாஸ்டர் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். தியேட்டர்களை திறந்த உடன் விஜய் படத்தை வெளியிட்டு கூட்டத்தை ஈர்க்க தியேட்டர் உரிமையாளர்களும் ஆவலாக இருப்பதாக கூறப்பட்டது.

ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் மாஸ்டர் படத்தை வெளியிட முடியாத சூழல் உள்ளது. இதனால் மாஸ்டர் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளனர். அடுத்ததாக பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவும் உறுதி இல்லையாம்.

ஜனவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை சரியாகிவிட்டால் மாஸ்டர் படத்தை வெளியிடுவார்களாம். இல்லை என்றால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் மாஸ்டரை பார்க்க முடியுமாம். 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்ட மாஸ்டர் படத்தை 2021ம் ஆண்டு ஏப்ரலில் வெளியிடுவார்களாம்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் வருத்தத்தை அளிக்கும். தீபாவளிக்கு இல்லை என்றாலும் பொங்கலுக்கு தியேட்டர்களில் மாஸ்டரை பார்த்து கொண்டாடலாம் என்று காத்திருக்கும் ரசிகர்கள் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.

Vijay தளபதி 65 படத்தில் இருந்து விலகிய முருகதாஸ்?: விஜய்யை இயக்கப் போவது இவரா?

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் கதை விவகாரம் தொடர்பாக பிரச்சனை ஏற்படவே முருகதாஸ் தளபதி 65 படத்தில் இருந்து விலகிவிட்டார். முருகதாஸ் சொன்ன கதையை விஜய் இரண்டு முறை திருத்தச் சொன்னதாகவும், திருத்தியும் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

கதையில் எல்லாம் பிரச்சனை இல்லை, சம்பளத்தை ஒரேயடியாக குறைத்துக் கொள்ளச் சொன்னதால் தான் முருகதாஸ் தளபதி 65 படத்தை இயக்க மறுத்தார் என்றும் பேசப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்