ஆப்நகரம்

தாத்தா எம்.ஆர். ராதா பற்றி உருக்கமான ட்வீட் போட்ட ராதிகா மகள்

தாத்தா எம். ஆர். ராதா பற்றி ராதிகா சரத்குமாரின் செல்ல மகள் ரயன் உருக்கமான ட்வீட் போட்டுள்ளார்.

Samayam Tamil 15 Apr 2020, 3:03 pm
நடிகவேல் எம்.ஆர். ராதாவின் பிறந்தநாளான நேற்று ராதிகா சரத்குமார் ட்வீட் போட்டிருந்தார். தன் அப்பா பற்றி ராதிகா ட்விட்டரில் கூறியதாவது,
Samayam Tamil rayane mithun


ராக்ஸ்டாரின் பிறந்தநாள். கொள்கைகளுடன் வாழ்ந்தவர். வழக்கறிஞர் கொடுத்த ரிப்போர்ட்டை வாசித்தபோது அவரை நீதிமன்றத்தில் பொய் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அவர் சிரித்தபடி, என் வாழ்க்கையில் நான் செய்யாததை செய்யுமாறு தயவு செய்து கேட்காதீர்கள் என்றார். என்ன நடந்தாலும் ஓகே என்றார் என தெரிவித்தார்.

ராதிகாவின் ட்வீட்டை பார்த்த அவரின் மகள் ரயன் மிதுனால் கமெண்ட் செய்யாமல் இருக்க முடியவில்லை. ரயன் கூறியதாவது,

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா. நானும், என் குழந்தைகளும் உங்களை பார்த்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் உங்களை பற்றி அவர்களிடம் கூறுவேன் என்றார்.



ரயன் மிதுனின் கமெண்ட்டை பார்த்த ராதிகாவின் ரசிகர்களோ, கவலைப்பட வேண்டாம். தாத்தா எங்கிருந்தாலும் உங்களை பார்த்துக் கொண்டு தான் இருப்பார் என்று ஆறுதல் கூறியுள்ளனர்.

இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த ரயன் மிதுனுக்கு கடந்த மாதம் 15ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராத்யா மிதுன் என்று பெயர் வைத்துள்ளார். தன் பாசத்திற்குரிய அம்மாவின் பெயரை லைட்டா மாற்றி மகளுக்கு ராத்யா என்று பெயர் வைத்திருக்கிறார் ரயன்.

சிம்பு, பிரபுதேவாவை பிரிந்தது ஏன்?: மனம் திறந்த நயன்தாரா

அடுத்த செய்தி

டிரெண்டிங்