ஆப்நகரம்

புற்றுநோய் போராட்டத்தில் தன் வலது மார்பகத்தை இழந்த தஹிரா காஷ்யப்

பிரபல நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவின் மனைவி தஹிரா காஷ்யப், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டுள்ளார்.

Samayam Tamil 5 Feb 2019, 7:23 am
பிரபல நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவின் மனைவி தஹிரா காஷ்யப், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டுள்ளார்.
Samayam Tamil Tahira-Kashyap-Khurrana1


சினிமாவில் உள்ளவர்கள் பலரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகை மனிஷா கொய்ராலா, கிரிக்கெட் வீரர் யுவராஜ், இர்பான் கான், நடிகை சோனாலி பிந்த்தே என சினிமா பிரபலங்கள் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து குணமாகி வருகின்றனர்.

உண்மையான ஹீரோ :எழுத்தாளர், இயக்குனர் என பன்முக திறமையை கொண்ட தஹிரா மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையில் தனது வலது மார்பகத்தை நீக்கி கொண்டார். புற்றுநோய் தினமான நேற்று அவருடைய புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, “இன்று என்னுடைய நாள். என்னுடைய இந்த தழும்பை என் தன்னம்பிக்கைக்கு கிடைத்த விருதாக நினைக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்