ஆப்நகரம்

ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகத் தமிழன் விருது!

ஏ.ஆர்.ரகுமானுக்கு, உலக தமிழ் வம்சாவளி சார்பில் உலகத் தமிழன் என்ற விருது வழங்கப்படுகிறது.

TOI Contributor 30 Dec 2016, 3:43 pm
ஏ.ஆர்.ரகுமானுக்கு, உலக தமிழ் வம்சாவளி சார்பில் உலகத் தமிழன் என்ற விருது வழங்கப்படுகிறது.
Samayam Tamil world nris are giving award to a r rahman
ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகத் தமிழன் விருது!


சென்னையில் ஜனவரி 6ம் தேதி உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் சார்பில் 3ம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா மற்றும் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டிற்கு உலக தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவில உலகெங்கும் வாழும் வம்சாவளித் தமிழர்களின் வாழ்க்கை நிலை, எதிர்கால திட்டம், குறித்து பல்வேறு அறிஞர்கள் பேசுகிறார்கள். நிகழ்ச்சியின் இறுதி பகுதில் உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் சால்பில் உலக தமிழன் விருது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள செய்தியில், “உலகத் தமிழன் விருதுக்கு சுந்தர்பிச்சை, சி அய்யாத்துரை, நவனீதம்பிள்ளை, ஏ.ஆர்.ரகுமான் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. பிறகு அனைவரின் ஒட்டுமொத்த ஒப்புதலுடன் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. தமிழ் கலாச்சார தூதுவராகவும், அனைத்து தமிழ் பேசும் நாடுகளுக்கும் ரகுமான் பாலமாக செயல்படுவதாலும், ஆஸ்கர் விருது வென்று தமிழன் பெருமையை உயர்த்தி பிடித்ததாலும் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது..

அடுத்த செய்தி

டிரெண்டிங்