ஆப்நகரம்

பிரபல நடிகர், எழுத்தாளர் பாரதி மணி மறைவு: திரையுலகினர் இரங்கல்!

'பாட்டையா' என அழைப்பட்ட எழுத்தாளரும் நடிகருமான பாரதி மணி எனும் கே.கே.எஸ்.மணி, வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

Samayam Tamil 17 Nov 2021, 10:08 am
பிரபல நாடக நடிகர், திரைப்பட நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் பாரதி மணி. இவர் வயது முதிர்வு காலம் காலமானார். இவருக்கு வயது 84. பாபா, அந்நியன் போன்ற பல படங்களில் நடித்துள்ள இவரின் வித்தியாசமான குரல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். இந்நிலையில் எழுத்தாளர் பாரதி மணியின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil Bharathi Mani
Bharathi Mani


நாகர்கோவில் அருகேயுள்ள பார்வதிபுரத்தில் பிறந்த பாரதி மணி, இளமைக் காலங்களில் நாடகங்களில் நடித்தனர். பின்னர் திரையுலகில் நுழைந்த இவர் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில், பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் ‘பாரதி’ மணி என அழைக்கப்பட்டார்.

ரஜினிகாந்தின் 'பாபா', விக்ரமின் 'அந்நியன்', ஒருத்தி, ஆட்டோகிராப் படங்களில் நடித்துள்ள மணி தனது அனுபவங்களை "புள்ளிகள், கோடுகள், கோலங்கள்" என புத்தகங்களாகவும் எழுதியுள்ளார். இலக்கிய உலகினரால் 'பாட்டையா' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார் பாரதி மணி.

நடிகர் சூர்யாவை வம்பிழுத்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம்: கருணாஸ் எச்சரிக்கை!
இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக சென்னையில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் மறைவிற்கு மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், திரையுலகினர், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்