ஆப்நகரம்

விஜய் ஆண்டனியின் 'எமன்' டிரைலர் வெளியீடு

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'எமன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

TNN 13 Feb 2017, 7:01 pm
சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'எமன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
Samayam Tamil yaman official trailer released
விஜய் ஆண்டனியின் 'எமன்' டிரைலர் வெளியீடு


தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப அரசியல் சார்ந்த கதைக் களத்துடன் உருவாகியுள்ள 'எமன்' பட டிரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகிற சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

ஜீவா ஷங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, தியாகராஜன், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள 'எமன்' திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர விஜய் ஆண்டனி கையில் எடுக்கும் ஆயுதம் அரசியல். இதனை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

Yaman, the new film from Tamil actor Vijay Antony has released. The first impression based on the trailer is positive without any doubt. It belongs to the commercial space and is a political thriller.

அடுத்த செய்தி

டிரெண்டிங்