ஆப்நகரம்

‘எமன்’ பிப்ரவரி 24ல் வெளியீடு!

‘எமன்’ பிப்ரவரி 24ல் வெளியீடு!

TOI Contributor 28 Jan 2017, 3:46 pm
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘எமன்’ பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது.
Samayam Tamil yeman movie released in feb 24
‘எமன்’ பிப்ரவரி 24ல் வெளியீடு!


ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி & மியா ஜார்ஜ் இணைந்து நடித்த படம் ‘எமன்’. விஜய் ஆண்டனியை வைத்து ‘நான்’ படத்தை இயக்கியவர் ஜீவா சங்கர். நடிகர் தியாகராஜன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். படத்தை லைக்கா புரொடக்ஷனுடன் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரித்துள்ளது. இசை விஜய் ஆண்டனி அமைத்துள்ளார்.

தாதாவா இருந்து அரசியல்வாதியாக மாறும் தியாகராஜனின் கொட்டத்தை அடக்க, அவரால் பாதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி, அவர் பாணியிலேயே தாதாவாகி அரசியல்வாதியாகி அவருக்கு எமனாக வந்து அவரை அடக்குகிறார்.இதுதான் படத்தை கதை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘எமன்’ படத்தின் டீசர், ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் வருகிற மகாசிவராத்திரியான பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்