ஆப்நகரம்

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ராதிகா மற்றும் யோகி பாபு!

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் புதிதாக தற்போது நடிகை ராதிகாவும், காமெடி நடிகர் யோகிபாபும் இணைந்துள்ளனர்.

Samayam Tamil 23 Jul 2018, 4:20 pm
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் புதிதாக தற்போது நடிகை ராதிகாவும், காமெடி நடிகர் யோகிபாபும் இணைந்துள்ளனர்.
Samayam Tamil yogi babu and rathika join with sivakarthikeyans next
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ராதிகா மற்றும் யோகி பாபு!


நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் வேகமாக முன்னேறி பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சீமராஜா’. இந்தப் படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. இந்தப் படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.


தற்போது இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமாரும், மற்றும் காமெடி நடிகர் யோகி பாபுவும் ஒப்பந்தமாகியுள்ளனர். இத்தகவலை ராதிகா தனது டுவிட்டரிலும் ஷேர் செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்