ஆப்நகரம்

கொரோனா பாதிப்பு: நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி வழங்கிய யோகி பாபு

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் யோகி பாபு அரிசி மூட்டைகளை அளித்துளளார்.

Samayam Tamil 9 Apr 2020, 1:53 pm
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அத்யாவசிய சேவைகள் தவிர மாற்றவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது இன்னும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil Yogi Babu distribute Rice Bags to actors during Corona Lockdown


மேலும் இந்த ஊரடங்களில் சினிமா துறையினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷூட்டிங் நிறுத்தப்பட்டதால் வேலை இழந்த சினிமா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என FEFSI அமைப்பு கேட்டுக்கொண்டது. அதை தொடர்ந்து ரஜினி, அஜித் உட்பட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் உதவி செய்தனர்.

அதே போல நடிகர் சங்கமும் உதவி கேட்டது. ஆனால் முன்னணி நடிகர்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதுவரை சில லட்சங்கள் மட்டுமே உதவி தொகை கிடைத்துள்ளது.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் யோகி பாபு 1250 கிலோ அரிசியை வாங்கி கொடுத்துள்ளார். யோகி பாபுவே நேரில் சென்று அவர்களுக்கு அரிசி பைகளை விநியோகித்துள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துளள்னர்.


யோகி பாபுவின் திருமண வரவேற்பு இன்று (ஏப்ரல் 9) நாடகவிருந்தது. ஆனால் ஊரடங்கு காரணாமாக அதை ரத்து செய்துள்ளார் யோகி பாபு. அதே நாளில் கஷ்டத்தில் இருக்கும் நடிகர்களுக்கு அரிசி வழங்கியுள்ளார் அவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்