ஆப்நகரம்

‘கோலமாவு கோகிலா’ படத்துக்கு யோகிபாபுவுக்கு நல்ல வரவேற்பு!

‘கோலமாவு கோகிலா’ படத்துக்குப் பிறகு காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு, சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Samayam Tamil 29 Aug 2018, 4:50 pm
‘கோலமாவு கோகிலா’ படத்துக்குப் பிறகு காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு, சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
Samayam Tamil coco


‘கோலமாவு கோகிலா’ படத்தில் பிரதான நாயகியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படத்தின் காமெடி கேரக்டராக நடிகர் யோகிபாபு நடித்துள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு ஹீரோக்களுக்கு இணையான வரவேற்பு யோகிபாபுவுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.

இதனை நிரூபிக்கும் விதத்தில் இவர் கலந்து கொள்ளும் திரைப்பட ப்ரோமோசன், பத்திரிக்கையாளர் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகள் நாயகர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆராவாரத்தை இவர் என்ட்ரி கொடுக்கும் போது ஏற்படுத்தி அவரை மகிழ்ச்சியில் ரசிகர்கள் ஆழ்த்திவருகின்றனர்.

அவர் மைக்கின் முன்பு வந்து நின்றாலே கரகோஷத்தால் அரங்கமே அதிருகிறது. இப்படி எப்பொழுதும் இல்லாத அளவிற்கு காமெடி நடிகருக்கு ரசிகரிடையே கிடைத்திருக்கும் வரவேற்பு அவரை ஒப்பந்தம் செய்துள்ள படக்குழுவினரையே வியக்க வைத்துள்ளதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்