ஆப்நகரம்

ஆர்யாவின் வருங்கால மனைவியுடன் குத்தாட்டம் போடும் யோகி பாபு!

காமெடி நடிகர் யோகி பாபு, ஆர்யா திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நடிகை சாயிஷா சைகலுடன் ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடனமாடவுள்ளார்.

Samayam Tamil 9 Jan 2019, 3:42 pm
நடிகர் ஜி.வி. பிரகாஷை வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய், தற்போது ‘வாட்ச்மேன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ராஜ் அர்ஜூன், உள்பட பலர் நடித்து வருகின்றனர் அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தையும்இயக்கி வருகிறார்.
Samayam Tamil yogibabu


இந்த நிலையில் ‘வாட்ச்மேன்’ படத்திற்காக சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ராப் பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளார். குத்து பாட்டு டைப்பில் இருக்கும் இந்த பாடலில் ஒருசில முன்னணி நடிகர், நடிகைகளும் சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடனம் ஆடவுள்ளனர்.

அந்த வகையில் இந்த பாடலுக்கு காமெடி நடிகர் யோகிபாபுவும், நடிகை சாயிஷா சைகலும் நடனமாடவுள்ளனர். தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாயிஷா சைகல், காமெடி நடிகருடன் குத்தாட்டம் ஆட ஒப்புக்கொண்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரை நடிகர் ஆர்யா திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்