ஆப்நகரம்

நயன்தாரா பேய் படத்தில், செல்லப்பிள்ளையான யோகி பாபுக்கு வாய்ப்பு

நயன்தாரா நடிக்க இருக்கும் புதிய படத்தில் யோகி பாபுவுக்கு வாய்ப்பு கேட்டுள்ளார்.

Samayam Tamil 19 Jun 2018, 6:20 pm
நயன்தாரா நடிக்க இருக்கும் புதிய படத்தில் யோகி பாபுவுக்கு வாய்ப்பு கேட்டுள்ளார்.
Samayam Tamil nayantara - yogibabu


நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்தின் நயன்தாராவை காதலிக்க சொல்லி, யோகி பாபு கெஞ்சுகிற மாதிரியான ‘கல்யாண வயசுதான் ஆகிருச்சு டீ’ என்ற பாடல் யூ-டியூபில் வெளியாகி மிக நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

இந்த படத்தில் யோகி பாபுவின் நடிப்பில் சிலிர்த்த நயன்தாரா, மற்ற படங்களில் நடிக்க யோகிபாபுவுக்கு சிபாரிசு செய்வதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் நயன்தாரா அடுத்த நடிக்க இருக்கிற பேய் படம் ஒன்றில் காமெடி நடிகராக யோகிபாபு நடிக்க வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாராம்.
ஏற்கனவே யோகி பாபுவின் கால்ஷீட் டைரி பல பட வாய்ப்புகளால் நிரம்பி வழிந்தாலும், நயன்தாராவுக்காக ஓகே சொல்லியுள்ளாராம் யோகிபாபு.

அடுத்த செய்தி

டிரெண்டிங்