ஆப்நகரம்

Yogi Babu: ‘தர்மபிரபு’ படத்தில் யோகி பாபு எடுத்துள்ள புது அவதாரம்!

சென்னை: தர்மபிரபு படத்தில் எமதர்மராஜா வேடத்தில் நடிக்கும் யோகி பாபு அந்த படத்தின் வசனங்களை எழுதுகிறார்.

Samayam Tamil 25 Dec 2018, 3:32 pm
சென்னை: தர்மபிரபு படத்தில் எமதர்மராஜா வேடத்தில் நடிக்கும் யோகி பாபு அந்த படத்தின் வசனங்களை எழுதுகிறார்.
Samayam Tamil Yogi-Babu


தமிழ் சினிமாவின் பிசியான காமெடி நடிகர் யோகி பாபு. இவர் தர்மபிரபு படத்தில் எமன் வேடத்தில் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அந்த படத்தின் வசனங்களையும் யோகி பாபு எழுதியுள்ளார்.

விமல், வரலட்சுமி இணைந்து நடித்துள்ள `கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் இப் படத்தை இயக்குகிறார். இதில் `வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக் சித்ரகுப்தன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இதை தவிர்த்து `கூர்கா', `ஜாம்பி' உள்ளிட்ட படங்களிலும் யோகி பாபு நடிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்