ஆப்நகரம்

'அவன் 20 ரூபா டோக்கன் கொடுத்தா,நம்ம 50 ரூபா டோக்கன் கொடுப்போம்'.! அரசியல்வாதிகளை வச்சு செய்யும் மண்டேலா டீசர்..

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டேலா' திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Samayam Tamil 14 Mar 2021, 3:17 pm
தமிழ்நாட்டில் அரசியல் நையாண்டி திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அதுவும் இப்போதுள்ள தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளை வச்சு செய்யும் திரைப்படங்கள் வெளியானால் கண்டிப்பாக சர்ச்சைகளையும், வரவேற்பையும் பெறும். அந்த வகையில் நேற்று வெளியான 'மண்டேலா' திரைப்பட டீசர் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.
Samayam Tamil mandela_yogibabu
mandela_yogibabu


யோகிபாபு நடிப்பில்,மடோன் அஸ்வின் இயக்கி உள்ள 'மண்டேலா' திரைப்படத்தின் டீசரை நேற்றைய தினம் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.'வழக்கம் போல இந்த படத்துலயும் கலக்குங்க' என யோகி பாபிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார் சிவகார்த்திகேயன். வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள, இந்த நேரத்தில் 'மண்டேலா' டீசர் ஏகப்பட்ட அரசியல் நையாண்டி வசனங்களுடன் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாலாஜி மோகன் முதல் முறையாக க்ரியேட்டிவ் புரொட்யூசராக பணியாற்றியுள்ள இந்த திரைப்படத்தில், ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தேர்தலை முன்னிட்டு கட்சிக்காரர்கள் மக்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுப்பது போல காட்சியையும் படத்தில் சேர்த்து பரபரப்பை கூட்டியிருக்கிறார் இயக்குநர். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவிற்காக இருபது ரூபாய் டோக்கன் வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

'என்ன தல அடுத்து நம்ம படம் இறவாக்காலம் தான' ..! 'சும்மா இர்ரா நானே நொந்து போயிருக்கேன்' .

'அவன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தா நாம 50 ரூபாய் டோக்கன் கொடுப்போம்' என்பதை போன்ற வசனங்களும் இடம்பெற்றுள்ளது. வெளியூர் ஆட்களை தேர்தல் சமையத்தில் ஓட்டுக்காக அழைத்து வருவது,'அவன் வெளியூர்ல இருந்து ஆட்கள இறக்குனா, நம்ம வெளிநாட்டுல இருந்த ஆட்களை இறக்குவோம்' என அரசியல்வாதி பேசுவது போன்ற ஏகப்பட்ட ரகளையான காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன.'மண்டேலா' கதாபாத்திரத்தில் முடி திருத்தும் நபராக வரும் யோகி பாபு 'இரண்டு பேர் தான நிற்குறதா சொன்னீங்க, இப்ப மூணாவதா ஒரு சின்னம் இருக்கு'என கேட்க, அது நோட்டா'என சொல்லியும், 'அதெல்லாம் தெரியாது காசு கொடுத்தாத ஓட்டு' என சொல்லி அதகளப்படுத்தியுள்ளார்.

டீசரை போல படத்தையும் தேர்தலுக்கு முன்னாடி வெளியீட்டால், கண்டிப்பாக சூப்பர் ஹிட்டடிக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.தேர்தல் சமயத்தில் வெளியானால் வரவேற்பை போல சர்ச்சைகளையும் 'மண்டேலா' திரைப்படம் கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்