ஆப்நகரம்

யார் படத்தில் நடிப்பிங்க ? : டப்ஸ்மாஷ் மிருணாளினி பதில்

சினிமா வசனங்கள், பாடல்களை அதேபோல நடித்துக்காட்டும் வீடியோ வடிவிலான தொகுப்புதான் டப்ஸ்மேஷ். பெங்களூரைச் சேர்ந்த மிருணாளினி இதில் ஈடுபட்டு புகழ்பெற்றவர். அவர் சினிமாவுக்குள் நுழைவது பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகிவருகிறது.

TNN 27 Jan 2017, 1:15 pm
சினிமா வசனங்கள், பாடல்களை அதேபோல நடித்துக்காட்டும் வீடியோ வடிவிலான தொகுப்புதான் டப்ஸ்மேஷ். பெங்களூரைச் சேர்ந்த மிருணாளினி இதில் ஈடுபட்டு புகழ்பெற்றவர். அவர் சினிமாவுக்குள் நுழைவது பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகிவருகிறது.
Samayam Tamil you like to act whose movie mirnalini answered
யார் படத்தில் நடிப்பிங்க ? : டப்ஸ்மாஷ் மிருணாளினி பதில்


இதுகுறித்து மிருணாளினி கூறும்போது , " நான் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடிப்பதாக ஒரு தகவலை சமூக வலைதளத்தில் பார்த்தேன். ஈட்டி பட இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் நான் இப்போதைக்கு நடிக்கவில்லை என்று கூறினார்.

மேலும் அவரிடம் நீங்கள் நடிக்கலாமுனு நினைச்சா யாருடைய படங்களில் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு மிருணாளினி பதிலளிக்கும் போது, " நான் கௌதம் வாசு தேவ் மேனன் சாரோட மிகப்பெரிய பேன். அவர் படத்துக்கு அழைப்பு வந்த கண்டிப்பா வீட்டுல ஓ.கே வாங்கி நடிப்பேன்" என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்