ஆப்நகரம்

விஷாலுக்கு பாடைகட்டிய இளைஞர்கள்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக நடத்தப்படும் போராட்டங்கள் வலுவடைந்து வருகிறது.

TNN 16 Jan 2017, 3:37 pm
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக நடத்தப்படும் போராட்டங்கள் வலுவடைந்து வருகிறது.
Samayam Tamil youngsters take actor vishal lookalike in hearse
விஷாலுக்கு பாடைகட்டிய இளைஞர்கள்!


தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் பீட்டா ஆதரவாளர்களாக உள்ள நடிகர் விஷால், நடிகை த்ரிஷா ஆகியோர் மக்களின் எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக விஷால் கருத்து தெரிவித்தாக சொல்லி, விஷாலை போல் இருக்கும் ஒருத்தருக்கு பாடைகட்டி, ஊர்வலமாக எடுத்து வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தவிர இந்த விஷயத்தில் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவர் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டகளின் முன் அவரது படத்தை எரிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்