ஆப்நகரம்

எங்க நெத்தியில இ..வா..ன்னு எழுதியிருக்கா?: ’பிக் பாஸை’ அசிங்கப்படுத்தும் இளைஞர்கள்!

தமிழக மக்களை முட்டாளாக்கி வரும் ‘பிக் பாஸ்’ தொடரை இளைஞர் சமூக வலைதளங்களில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

TNN & Agencies 28 Jun 2017, 9:18 am
சென்னை: தமிழக மக்களை முட்டாளாக்கி வரும் ‘பிக் பாஸ்’ தொடரை இளைஞர் சமூக வலைதளங்களில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.
Samayam Tamil youths partcipated in jallikattu protest got angry on big boss show and juliana
எங்க நெத்தியில இ..வா..ன்னு எழுதியிருக்கா?: ’பிக் பாஸை’ அசிங்கப்படுத்தும் இளைஞர்கள்!


இரண்டு நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் பிக் பாஸ் எனும் புதிய நிகழ்ச்சியை துவங்கியது. இதில் பெரும்பாலான திரைப்பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக உலகையே திரும்பிபார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற ஜூலியானாவை களமிறக்கினர்.

இதற்கு தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கவே ஜூலியை அந்நிறுவனம் களமிறக்கியுள்ளதாக தெரிகிறது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது ஒட்டுமொத்த டி-வி சேனல்களும் ஒருவரிச் செய்தியாகவாது வெளியிட்டது. ஆனால், இந்த டி-வி நிறுவனம் எதுவுமே நடக்காதது போல, அப்போதும் வழக்கம்போல தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தது.

ஆனால் சில நாட்களுக்கு பின் மக்கள் மத்தியில் நிலவிய கருத்துக்களைப்பார்த்து உடனே விவாத நிகழ்ச்சி நடத்தியது. இந்நிலையில், தமிழர்கள் தங்கள் உணர்வுக்காகவும், உரிமைக்காகவும் உலகத்தின் ஒவ்வொரு இடத்திலும் போராடிய போராட்டத்தை பார்த்து வாயை பிளந்து, டி.ஆர்.பி.,க்காக அந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒருவரை அழைத்து நிகழ்ச்சி நடத்திவருவதாக தமிழக இளைஞர்கள் கடுப்பாகியுள்ளனர்.

தமிழகத்தின் ஒவ்வொரு ஊர்களிலும், ஒவ்வொரு வீதிகளிலும் சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை வீதிக்கு வந்து வியர்வை சிந்தி, கடைசியில் ரத்தம் சிந்தி அடைந்த வெற்றியை வெறும் வியாபாராமாக்கி விட்டதாகவும் இளைஞர் கொந்தளித்துள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்ட ஜூலியும், தனக்கு பணம் கிடைத்தால் போதும் என நிகழ்ச்சியில் பங்கேற்று என்ன என்னவோ பேசி வருகிறார்.

தமிழக மக்கள் மத்தியில் கிடைத்த புகழை சரியாக பயன்படுத்தாத யாரும் நிரந்தரமாக நிலைத்தாக சரித்திரம் இல்லை என்பதை 'ஜல்லிக்கட்டு ஜூலியானா’வுக்கு யாராவது எடுத்துச்சொன்னால் சிறப்பாக இருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்