ஆப்நகரம்

யூ-டியூப் பிரபலங்கள் இணையும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’

யூ-டியூப்பில் பிரபலங்களாக இருக்கும் எரும சாணி விஜய், ஹரிஜா, மெட்ராஸ் சென்ட்ரல் கோபி, சுதாகர் போன்ற பிரபலங்கள் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்திற்கு ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என பெயரிட்டுள்ளனர்

TNN 19 Nov 2017, 4:26 pm
யூ-டியூப்பில் பிரபலங்களாக இருக்கும் எரும சாணி விஜய், ஹரிஜா, மெட்ராஸ் சென்ட்ரல் கோபி, சுதாகர் போன்ற பிரபலங்கள் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்திற்கு ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என பெயரிட்டுள்ளனர்.
Samayam Tamil youtube channels celebrities are going to act in a new movie called oodavum mudiyaathu oliyavum mudiyaathu
யூ-டியூப் பிரபலங்கள் இணையும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’


யூடியூப் சேனல்கள் மூலம் பிரபலமடைந்தவர்களான விஜய், ஹரிஜா, கோபி, சுதாகர் மற்றும் சில யூடியூப் பிரபலங்களை வைத்து புதிய படம் ஒன்று உருவாகிறது. இந்தப் புதிய படத்திற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் பயன்படுத்தும் வசனமான “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற வசனத்தைத் தலைப்பாக வைத்துள்ளனர்.

இந்தப் படத்தை எரும சாணி என்ற சேனலின் வீடியோக்களை இயக்கிய ரமேஷ் வெங்கட் என்பவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை சத்யமூர்த்தி என்பவர் தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இதில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் 21 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான்.

இந்த ஆண்டு இறுதியில் உருவாக உள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக்கால விடுமுறையின் போது வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்