ஆப்நகரம்

சுசீந்திரன் - யுவன் கூட்டணி முறிவு!

இயக்குனர் சுசீந்திரன் படத்திலிருந்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விலகியுள்ளார்.

Samayam Tamil 30 May 2018, 5:50 pm
இயக்குனர் சுசீந்திரன் படத்திலிருந்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விலகியுள்ளார்.
Samayam Tamil yuvan susee


தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவரது மியூசிக்கில் படம் பண்ணுகிற சில முன்னணி இயக்குனர்கள் இவருக்காக காத்திருந்திருக்கிறார்கள். அப்படி யுவனின் பேவரட் இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் சுசீந்திரன்.

சுசீந்திரன் இயக்கிய ‘நான் மகான் அல்ல’, ‘ராஜபாட்டை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருந்தார். பிறகு ஒரு சில காரணங்களால் இந்த கூட்டணி பிரிந்தது. மீண்டும் ‘கோல்’ என்ற படத்தின் மூலம் இணைந்தனர். தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, அந்த படத்திலிருந்தும் யுவன் விலகிவிட்டார், இவருக்கு பதிலாக இசையமைப்பாளர் அரோல் குரோலியை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்