ஆப்நகரம்

‘குரங்கு பொம்மை’ பாடல் உரிமையை கைப்பற்றிய யுவன் ஷங்கர் ராஜா!

பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ‘குரங்கு பொம்மை’ படத்தின் பாடல் உரிமையை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கைப்பற்றியுள்ளார்.

TNN 4 Apr 2017, 4:27 pm
பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ‘குரங்கு பொம்மை’ படத்தின் பாடல் உரிமையை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கைப்பற்றியுள்ளார்.
Samayam Tamil yuvan shankar raja get rights of kurangu pommai songs
‘குரங்கு பொம்மை’ பாடல் உரிமையை கைப்பற்றிய யுவன் ஷங்கர் ராஜா!


பாரதிராஜா, விதார்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குரங்கு பொம்மை’. இந்தப் படத்தை ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை நித்திலன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார். மேலும் அனிமேஷன் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது யு 1 ரெக்கார்ட்ஸ் மூலம் பெற்றுள்ளார். யுவன் இசை உரிமையை பெற்றது ‘குரங்கு பொம்மை’ படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இசை விரைவில் வெளியாகவுள்ளது.

Yuvan Shankar Raja get rights of Kurangu Pommai songs.

அடுத்த செய்தி

டிரெண்டிங்