ஆப்நகரம்

பேத்திக்கு இசை கற்று கொடுக்கும் இசைஞானி இளையராஜா: யுவன் வெளியிட்ட க்யூட் வீடியோ!

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் க்யூட்டான வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

Samayam Tamil 2 Jun 2021, 4:34 pm
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் 73ஆவது பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உலகத் தமிழ் ரசிகர்களை தனது இசையால் 40 வருடங்களுக்கு மேலாக கட்டி போட்டவர் இளையராஜா. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDRajasir என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் தனது தந்தையின் பிறந்த நாளுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
Samayam Tamil Ilayaraja_Yuvan Shankar Raja
Ilayaraja_Yuvan Shankar Raja


அன்னக்கிளி என்கிற முதல் படத்திலே தமிழ் சினிமா உள்ளங்களில் குடியேறியவர் இசைஞானி இளையராஜா. டீ கடைகளிலும், பேருந்துகளிலும் இவர் இசையில் ஒலிக்கும் பாடல்கள் தனி ராஜாங்கமே நடத்தும். இசைஞானி இளையராஜாவை தங்களின் குடும்பத்தில் ஒருவராய் பாவித்து வாழும் எண்ணற்ற ரசிகர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் தன்னுடைய 73 வது பிறந்த நாளை கொண்டாடும் இளையராஜாவின் பாடல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் மன மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அப்பாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், தனது மகளுக்கு அப்பா இளையராஜா ஹேப்பி பர்த்டே பாடலை கீபோர்டில் வாசிக்க கற்றுக் கொடுக்கும் பழைய வீடியோ ஒன்றை ஷேர் செய்து, 'ஹேப்பி பர்த்டே டாடி' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

பொழுது போக்கு துறையின் கிராண்ட் மாஸ்டர்: இயக்குனர் மணிரத்னத்துக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முன்னதாக இளையராஜாவின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான பாரதிராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் 'உனக்கும், உன் இசைக்கும், நம் உறவுக்கும், என்றும் வயதில்லை வாழ்த்துகள்டா இளையராஜா - இப்படிக்கு உயிர்த்தோழன் பாரதிராஜா' என்று பதிவிட்டு அதனுடன் இளையராஜாவும், பாரதிராஜாவும் எடுத்து கொண்ட பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.


சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்திற்காக முதன்முதலாக யுவன் சங்கர் ராஜாவும் இளையராஜாவும் ஒன்றாக இணைந்து இசையமைத்துள்ளனர். அண்மையில் வெளியான இந்த படத்தின் இரு பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்