ஆப்நகரம்

மீண்டும் விஜய்யுடன் இணைவதைப்பற்றி பேசிய யுவன் ஷங்கர் ராஜா..!

விஜய் படத்திற்கு மீண்டும் இசையமைக்கவுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா தகவல்

Samayam Tamil 23 May 2022, 8:49 am

ஹைலைட்ஸ்:

  • விஜய் படத்திற்கு இசையமைப்பேன்
  • யுவன் தகவல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil yuvan shankar raja speaks about actor vijay
மீண்டும் விஜய்யுடன் இணைவதைப்பற்றி பேசிய யுவன் ஷங்கர் ராஜா..!
தமிழ் சினிமாவின் தளபதியாக மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கின்றார் நடிகர் விஜய். சமீபத்தில் இவரது நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.
இருப்பினும் இப்படம் வசூல் ரீதியாக வெற்றி படமாகவே அமைந்தது. இதைத்தொடர்ந்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வருகின்றார். ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்..ரகசியம் கசிந்ததா ?


தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா விஜய்யுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதை பற்றி பேசியுள்ளார்.


இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்

விஜய்யின் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அதன் பிறகு அவர் விஜய் படங்களுக்கு இசை அமைக்கவில்லை. எனவே சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் விரைவில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

undefined

கடந்தாண்டு விஜய் மற்றும் யுவன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலானது. அதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளதாக பேசிவந்தனர்.

ஆனால் அது இதுவரை நடக்கவில்லை. இந்நிலையில் தற்போது யுவன் அவர்களே விரைவில் விஜய் படத்திற்கு இசையமைப்பேன் என்று கூறியுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்