ஆப்நகரம்

மீண்டும் யுவனுடன் கைகோர்க்கும் ‘தல’ அஜித்!!

நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 12 Sep 2018, 4:05 pm
நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil மீண்டும் யுவனுடன் கைகோர்க்கும் ‘தல’ அஜித்!!
மீண்டும் யுவனுடன் கைகோர்க்கும் ‘தல’ அஜித்!!


தற்போது நடிகர் அஜித், சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் நடிகை நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதன்மூலம் இசையமைப்பாளர் டி.இமான், முதல் முறையாக நடிகர் அஜித்தின் படத்திற்கு இசையமைத்து வருகிறார். பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே, நடிகர் அஜித் அடுத்ததாக ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எச்.வினோத்தின் இயக்கத்தில், நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியது. ஹிந்தியில் வெளியாகிய ‘பிங்க்’ படத்தின், தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜித்தின் ஆஸ்தான மற்றும் ராசியான இசையமைப்பாளர் என கருதப்படும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்