ஆப்நகரம்

2017ல் 16 புதிய படங்களை வாங்கி குவித்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

2017ம் ஆண்டு மட்டும் 16 புதிய படங்களை பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது.

TNN 23 Aug 2017, 3:20 am
2017ம் ஆண்டு மட்டும் 16 புதிய படங்களை பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது
Samayam Tamil zee tamil television bought totally 16 movies rights for telecast
2017ல் 16 புதிய படங்களை வாங்கி குவித்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!


எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு புதிய படங்களை வாங்குவதில் சேனல்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதுவும் பெரிய பட்ஜெட் படங்களாக பார்த்து வாங்குகின்றன. 5 கோடி முதல் 15 கோடி வரை கொடுத்து உரிமம் பெறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜீ தமிழ் இதுவரை 16 படங்களின் உரிமத்தை வாங்கி முதலிடத்தில் இருக்கிறது.

‘அதே கண்கள்’, எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘எமன்’, ‘டோரா’, ‘கவண்’, ‘சிவலிங்கா’, ‘8 தோட்டாக்கள்’, ‘மரகத நாணயம்’, ‘வனமகன்’, ‘இவன் தந்திரன்’, ‘நிபுணன்’, ‘பொதுவாக என்மனசு தங்கம்’, ‘புரியாத புதிர்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘சர்வர் சுந்தரம்’, ‘ஸ்பைடர்’ ஆகிய படங்களை வாங்கி குவித்துள்து. மாதத்திற்கு இரண்டு புதிய படங்கள் என்கிற வகையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்