ஹாட் ஸ்பாட் விமர்சனம்
கௌரி கிஷன்,ஆதித்யா பாஸ்கர்,சாண்டி,ஜனனி
நான்கு கதைகளை காட்டி அவை எப்படி சேர்கிறது என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். தான் படமாக்க விரும்பும் நான்கு கதைகளை தயாரிப்பாளரிடம் சொல்லும் இயக்குநராக விக்னேஷ் கார்த்திக்கே நடித்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு நான் மனைவி வீட்டில் தான் வசிப்பேன். ஆண், பெண் இருவரும் சரிசமமானவர்கள் என தன் வருங்கால மனைவியிடம் கன்டிஷன் போடும் இளைஞனின் கதை ஒன்று.
இரண்டு பேர் காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய முடிவு செய்தபோது அவர்கள் அண்ணன், தங்கை உறவு முறை என்பது தெரிய வருகிறது. இதையடுத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே அடுத்த கதை.
மோசமான செயலால் வாலிபர் ஒருவர் வேலையை இழக்கிறார். அதன் பிறகு தன் உடம்பை வைத்து பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார். இது அவரின் காதலிக்கு தெரிய வந்த பிறகு என்னவாகிறது என்பது இன்னொரு கதை.
ஏழை ஆட்டோ டிரைவர் தன் மகளை பிரபல டிவி சேனல் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ளச் செய்கிறார். அந்த பெண் மர்மமான முறையில் இறக்கிறார். மகளின் மரணத்திற்கு காரணம் அந்த டிவி சேனல் தான் என்கிறார் அப்பா. இது தான் கடைசி கதை.
நான்கு தனிக் கதைகளை படமாக்கியபோதிலும் அது சொல்லும் கருத்துகள் நம்மை ஈர்க்கிறது. ஹேப்பி மேரிட் லைஃப், கோல்டன் ரூல்ஸ், தக்காளி சட்னி ஆகிய கதைகள் ஜாலியாக செல்கிறது. ஆனால் ஃபேம் கேம் கதை சீரியஸாக உள்ளது. முதல் மூன்று கதைகள் ஜாலியாக இருந்தாலும் ஓவராக கருத்து சொல்கின்றன.
ஹேப்பி மேரிட் லைஃபில் ஆதித்யா பாஸ்கரும், கௌரி கிஷனும் நடித்திருக்கிறார்கள். இரண்டாவது கதையான கோல்டன் ரூல்ஸில் சாண்டியும், அம்மு அபிராமியும் நடித்துள்ளனர். திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகளை பற்றியது தான் இந்த இரண்டு கதைகளும் என்றாலும் அவை வேறுபட்டுள்ளன.
தக்காளி சட்னியில் ஜனனி ஐயரும், சுபாஷும் நடித்துள்ளனர். கதையில் சுபாஷின் பெயர் வெற்றி. ஆனால் அவர் வாழ்க்கையில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை.
ஆக, முதல் மூன்று கதைகள் சிரிப்பை வரவழைக்கின்றன. கடைசி கதை மட்டும் நம்மை கவலை அடைய செய்கிறது.

Latest Kollywood News | Cinema News | Tamil Movie Review