ஆப்நகரம்

Podhu Nalan Karudhi Movie: எல்லோரும் தல அஜித் மாதிரி வர முடியுமா? கருணாகரன் மீது போலீசில் புகார்!

கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி காமெடி நடிகர் கருணாகரன் மீது பொதுநலன் கருதி படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Blogger - Sivakasi Samayal 12 Feb 2019, 10:52 am
கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி காமெடி நடிகர் கருணாகரன் மீது பொதுநலன் கருதி படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
Samayam Tamil naka


இயக்குனர் சியோன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அதிதி அருண், கருணாகரன் ஆகியோர் பலர் இயக்கத்தில் கடந்த 7ம் தேதி வெளியான படம் பொதுநலன் கருதி. இந்த நிலையில், இப்படத்தின் புரோமோஷன் நிகச்சிக்கு படக்குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கருணாகரன் வரவில்லை. இதற்கு இயக்குனர் சியோன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதற்கு கருணாகரன் தனது டுவிட்டர் பக்கத்தி பதில் அளித்ததோடு, படத்தின் இணை தயாரிப்பாளாரான விஜய் ஆனந்திற்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இயக்குனர் சியோன், இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் கூறியிருப்பதாவது: படத்தில் நடிப்பதற்காக கருணாகரனுக்கு ரூ.25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. எனினும், படத்தின் இசை வெளியீட்டு விழா, பட புரோமோஷன் ஆகியற்றிற்கு அவர் வரவில்லை.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குனர் சியோன் கூறுகையில், ஏற்கனவே கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிடும் பிரச்சனைகளை சந்தித்தோம். இப்போது, அவர்களைப் போன்று நடிகர் கருணாகரனும் எங்களை மிரட்டுகிறார். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் மற்றும் நடிகர் சங்கத்தலைவர் நாசர் ஆகியோரிடம் முறையிட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு விளக்கமளித்துள்ள கருணாகரன் கூறுகையில் இது முழுக்க முழுக்க பொய் குற்றச்சாட்டு. படத்தின் ஆடியோ 4ம் தேதி என்று சொல்லி எனக்கு 1ம் தேதி இரவு 9 மணிக்கு தான் அழைப்பு வந்தது. காலம் குறைவு என்பதாலும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகளுக்காகவும் என்னால் வரமுடியவில்லை என்று ஏற்கனவே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கூறியிருந்தேன். படப்பிடிப்பு முடிந்த நான் சென்னைக்கு வந்தது 8ம் தேதி தான். அப்படியிருக்கும் போது நான் வேண்டுமென்றே வரவில்லை என்று என் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

மேலும், கந்துவட்டிக்காரர்களைப் போன்று நான் மிரட்டுவதாக கூறுகிறார்கள். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் அப்படி வளரவில்லை. எனது அப்பா காளிதாஸ் தேசத்தின் பாதுகாப்புக்காக உழைக்கும் மத்திய அரசின் முக்கிய துறையில் பணியாற்றி விருது பெற்றவர். இவர்கள் கூறிய வழியில் தான் நான் நடந்து கொண்டிருக்கிறேன். கந்துவட்டிக்காரகளுடன் இணைந்து படத்திற்கு எதிராக நான் செயல்படுவதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்