பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக நடிகர் சிவகார்த்திகேயன் முடித்துள்ளார்.தமிழ் சினிமாவை கலக்கி வரும் சிவகார்த்திகேயன், முதல்முறையாக தெலுங்கில் முத்திரை பதிக்கவுள்ளார். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
பிரின்ஸ் என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார்.
முழுக்க முழுக்க காமெடி ஜோனரில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
இந்த படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஏற்கனவே இப்படத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.