ஆப்நகரம்

'90'ஸ் கிட்ஸ்' முதலில் கல்யாணம் செய்... நெட்டிசன் போட்ட குபீர் கமெண்ட்..!

விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று பகிரப்பட்டிருந்த போஸ்ட்டுக்கு நெட்டிசன் போட்டுள்ள கமெண்ட் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 25 Oct 2022, 8:23 pm
90'ஸ் கிட்ஸ்களை பெருமைப்படுத்தியும், பரிதாபப்படுத்தியும் இணையத்தில் மீம்ஸ்கள் போடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதிலும், 30 வயது கடந்தும் பல 90 'ஸ் கிட்ஸ்களுக்கு திருமணமாகாமல் இருப்பதை சுட்டிக்காட்டி திருமண மீம்ஸ்கள் தினமும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Samayam Tamil tamil joke


இந்த நிலையில், இணையத்தில் காணப்பட்ட ஒரு அறிவுரை பதிவுக்கு ஒருவர் போட்டுள்ள கமெண்ட் அனைவரையும் சிரிக்க செய்துள்ளது. அந்த பதிவில், இளைஞர்களே 25 வயது முடிந்துவிட்டதா, நீ வேலையில் இருக்கிறாயோ இல்லையோ முதலில் திருமணம் செய். எல்லாம் எதிர்காலத்தில் கிடைத்துவிடும், இளமை மீண்டும் கிடைக்காது. அரசு வேலை வாங்கலாம், பிளாட் வாங்கலாம். வீடு கட்டலாம். திருமணம் செய்யலாம் என்று நினைத்தால் 40 வயதாகிவிடும். நீ நினைக்கும் எல்லாம் கிடைக்கம். மீண்டும் இளமை கிடைக்காது. இளைஞர்களே உடனே திருமணம் செய்யுங்கள் . எதில் வேண்டுமானாலும் தாமதிக்கலாம். திருமணத்தில் தாமதம் வேண்டாம்'' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள கமெண்ட் குபீர் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கெமெண்டில், இதை எங்க அப்பாவின் வாட்சப் எண்ணிற்கு அனுப்பி விடுறீங்களா என்று கேட்டுள்ளார். அதற்கு, நெட்டிசன்கள் பலரும் ஹாஹா ரியாக்ஷன் போட்டு அந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி