ஆப்நகரம்

தேர்தலை அழகாக புரிய வைக்கும் ஒரு குட்டி உப்புமா கதை..!

சமூக வலைத்தளத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள உப்புமா கதை

Samayam Tamil 25 Jan 2021, 9:40 pm
ஒரு ஹாஸ்டல்ல, தினமும் காலை உணவாக, உப்புமா போட்டாங்களாம்...
Samayam Tamil upma


100 பேர்ல, 80 பேர், இதை மாத்தணும், வேற வேணும்னு வார்டன்கிட்ட கம்ளெயிண்ட் பண்ணுனாங்களாம்...

ஆனால் 20 பேர் இதான் பிடிக்குது, இதான் தினமும் வேணும்னு முட்டுக் கொடுத்தாங்களாம்...

ஆனால் 80 பேர் மாற்றம் வேணும்ங்கறாங்க....

வார்டன் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்த முடிவு செஞ்சார்.
அந்த 20 பேர், உப்புமாவுக்கே ஓட்டு போட்டாங்க.....

மத்த 80 பேர், அவங்களுக்குள்ள ஒண்ணா முடிவெடுக்கல... அவங்களுக்கு, பிடிச்சதுன்னு ஓட்டு போட்டாங்க...

18 பேர் தோசை
16 பேர் இட்லி
14 பேர் பொங்கல்
12 பேர் பிரட் பட்டர்
10 பேர் ஊததப்பம்
10 பேர் பூரி
என்ன ஆச்சுனா,...
இன்னிக்கும், அந்த ஹாஸ்டல்ல, உப்புமா தான் காலை உணவு....

காரணம், ஜனநாயகப்படி, மெஜாரிட்டி, "உப்புமா" தானாம்....

குறிப்பு: இதுக்கும், அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உப்புமா பிடிக்காத அந்த 80 பேர் ஒரே முடிவை எடுத்திருந்தா, அட்லீஸ்ட் உப்புமாகிட்ட இருந்தாவது தப்பியிருக்கலாம்.

அடுத்த செய்தி