ஆப்நகரம்

நடுரே, புடுரேவா... அப்டினா என்னென்னு தெரியுமா?

வகுப்பறையில் மாணவனின் ஆங்கில உச்சரிப்பு தொடர்பான நகைச்சுவையை இங்கே காணலாம்.

Samayam Tamil 28 Nov 2020, 12:14 pm
ஒரு மாணவன் தனது ஆங்கில ஆசிரியரிடம் ஒரு சந்தேகம் கேட்டுள்ளான். அதாவது ’நடுரே’ அப்டினா என்ன சார்? எங்க திரும்பி சொல்லு என்றார் ஆசிரியர். அதற்கு ’நடு ரே’ என்று கூறியிருக்கிறான். அப்புறமா சொல்கிறேன் என்று ஆசிரியர் சென்றுவிட்டார். அந்த வார்த்தையை ஆங்கில அகராதியில் தேடித் தேடிப் பார்த்தார்.
Samayam Tamil Student Jokes in Tamil


இணையத்திலும் தேடினார். ஆனால் எங்குமே கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று ஆசிரியருக்கு தெரியவில்லை. சரி சமாளிப்போம் என்று பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு சந்தேகம் கேட்ட மாணவனைக் கண்டதும் கண்டு கொள்ளாமல் சென்றுள்ளார்.

ஆனால் அந்த மாணவன் விடவில்லை. தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நீ சொன்ன வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சொல்லு என்று கேட்டுள்ளார். அதற்கு N... A... T... U... R... E... என்று கூறியுள்ளான்.

Wife Jokes in Tamil: நீங்க பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார்!

அதைக் கேட்டதும் நேச்சர் என்பதைத் தான் மாணவன் தவறுதலாக உச்சரிக்கிறான் என்று புரிந்து கொண்டார். உடனே நீ தவறாக கேட்டு விட்டு என்னை சாவடிக்கிறாயா? உன்னை இந்த பள்ளியை விட்டே துரத்துகிறேன் பார் என்று கூச்சலிட்டுள்ளார்.

ஓடி வந்த மாணவன், ஆசிரியரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, அப்படி எல்லாம் செய்துவிடாதீர்கள். என்னுடைய புடுரே வீணாகிடும் என்று கூறியுள்ளார். அதுதாங்க F... U... T... U... R... E... இதைக் கேட்டதும் ஆசிரியர் எடுத்தார் பாருங்கள் ஓட்டம்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்