ஆப்நகரம்

Tamil Jokes : மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 10 Jul 2019, 5:48 pm
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
Samayam Tamil fun cartoon

ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….
=====================
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி…..காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்….இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
=======================
காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……
சீனாவுல தான் பிறந்தது…..ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
==========================
ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, ” பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind ‘ல் அல்ல” என்கிறார். இதைத்தான் நாம் “வெட்டி ஸீன்” போடுவது என்கிறோம்….
==========================
நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…..
நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் – 1: அப்புறம் பாக்கெட்’ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்….
=======================

மேலும் படிக்க : http://smym.in/jokes

நீங்கா நினைவுகளுக்கு : http://smym.in/TamilOldSongs

அடுத்த செய்தி