ஆப்நகரம்

Wife Jokes : வீடு பூரா சுத்தமாகட்டுமேன்னு காத்துகிட்டு இருந்தேன் டாக்டர்!

வாட்ஸ் ஆப்பில் படு வேகமாக வலம் ஜோக்குகளில் இதுவும் ஒன்று. படிங்க.. வாய் விட்டு சிரிங்க.. டென்ஷனா இருந்தா ஜாலியா மாறிடுங்க...!

Samayam Tamil 22 Jan 2020, 11:27 am
ஒரு அம்மா, டாக்டரைத் தேடி வந்தாங்க.
Samayam Tamil doctorpatient1

டாக்டர்... எங்க வீட்டுக்காரருக்கு திடீர்ன்னு அகோரப்பசி ஏற்பட்டுப் போச்சு! நிறைய நிறைய சமைச்சு போடுறேன்... அவ்வளையும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கார். அதுவும் பத்தலன்னு கீழே கிடக்கிற குப்பைக்கூளங்களையும் எடுத்துச் சாப்பிட ஆரம்பிச்சுடறார். என்னான்னு பாருங்களேன்... டாக்டர்.
சரிம்மா... எவ்வளவு நாளா இப்படி இருக்காரு..?
ஒரு வாரமா இப்படி இருக்காரு டாக்டர்..
இவ்வளவு நாளா ஏன் சும்மா இருந்தீங்க? ஆரம்பத்துலயே இங்கே கூட்டிகிட்டு வர வேண்டியதுதானே?
இல்ல டாக்டர்... வீடு பூரா கொஞ்சம் சுத்தமாகட்டுமேன்னு காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்!

அடுத்த செய்தி