ஆப்நகரம்

Corono Movie : கொரோனாவை வைத்து படம் எடுத்தால் இப்படித்தான் இருக்குமோ..!

வாட்ஸ் ஆப்பில் படு வேகமாக வலம் ஜோக்குகளில் இதுவும் ஒன்று. படிங்க.. வாய் விட்டு சிரிங்க.. டென்ஷனா இருந்தா ஜாலியா மாறிடுங்க...!

Samayam Tamil 11 May 2020, 2:54 pm
படத்தின் ஆரம்பம்மே பதற்றத்துடன் ஆரம்பித்தது. பாத்திர அறிமுகங்கள் அதிரடியாக இருந்தது .
Samayam Tamil theater

அமைச்சர் "என்ட்ரி" செம மாஸ் ..அடுத்து, அடுத்து அறிமுகமான , தப்லிக் எல்லாம் டெம்போவை கூட்டியது .

படம் நெடுகிலும் டைரக்ட்டர் செம மாஸ் காட்டிக்கொண்டே இருந்தார் ..போலிசின் துரத்தல்களும் ,விளாசல்களும் ட்ரோன் "சாட்களும்' பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமரவைத்தது .டிவி விவாதங்களும் புள்ளி விபரங்களும் திகில் கிளப்பின .

டைரக்டர் படத்தை செமையாக கையாள்கிறார் ."எண்டு" கார்டு போடும்போது மாஸ் காட்டிவிடுவார் என்று எல்லோரும் ஆவலுன் எதிர் பார்த்து இருந்த பொது டாஸ்மாக் சீனை வைத்து படத்தின் டெம்போவை குறைத்து விட்டார் .

இதிலிருந்து படத்தை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் டைரக்டர் குழம்பி போய்விட்டது நன்றாக தெரிகிறது.. நாளாக ,நாளாக படத்தை எப்படியாது முடிக்கவேண்டும் என்று.., அவரே குழம்பி போய் கதையை நகர்த்துகிறார்.

.இதற்குள் படம் சலிப்பு தட்டி பார்வையாளர்கள் முட்டு சந்துக்கு வந்து விட்டார்கள் .

"சாமி"..., நீ எப்படியாவது படத்தை முடித்துக்கொள் .எங்களை வெளியே விட்டால் போதும் என்ற மன நிலைக்கு வந்த பார்வையாளர்கள் உள்ளேயும் இருக்கமுடியாமல் ,வெளியேயும் போக முடியாமல் தவிப்பதுடன் படம் அல்லாடிக்கொண்டு உள்ளது ..

மொத்தத்தில் 50 நாட்கள் ஓடிய படம் காசுள்ளவனுக்கு நல்ல என்டர்டெயன்மென்ட். காசில்லாதவனுக்கு நரகம்.

அடுத்த செய்தி