ஆப்நகரம்

அப்போ 13 வினாடி பாக்கலாமா..? பட்டையை கிளப்பும் பெண் பயணிகள் மீம்ஸ்

பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளை ஆண்கள் முறைத்து பார்க்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து சோசியல் மீடியாவில் பல மீம்ஸ்கள் உலா வருகின்றன.

Samayam Tamil 26 Aug 2022, 5:13 pm
தமிழக பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு ஆண்களால் சில சமயங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காகவும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil bus meme


*அதன்படி, பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை வாகனத்தில் இருந்து இறக்கிவிடலாம்.

*நடத்துனர் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம்.

*ஆண் பயணிகள் கூச்சலிடுதல், கண் அடித்தல், விசில் அடித்தல், சைகை உள்ளிட்டவற்றை செய்யக் கூடாது'' போன்ற விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிலையில், பெண்களை 14 வினாடிக்கு மேல்தான் பார்க்கக்கூடாது என்றும் ஒருவேளை அந்த 14 வினாடிக்குள் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற கணக்கில் மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதை நம்பி யாரும் செயல்பட வேண்டாம் என்றும் 14 வினாடி இல்லை ஒரு நொடிகூட பெண்களை தவறாக பார்த்தாலும், சீண்டினாலும், தொந்தரவு ஏற்படுத்தினாலும் பேருந்து நேராக காவல் நிலையம் சென்றுவிடும் என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர். இதை வெறும் மீமாக மட்டும் எடுத்துக்கொண்டு பெண்களின் பாதுகாப்பை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி