ஆப்நகரம்

Tamil Jokes : சேலையைதான் பார்க்கணுமா...? அதை நீ சொல்லவே இல்ல...!

Tamil Jokes : சேலையைதான் பார்க்கணுமா...? அதை நீ சொல்லவே இல்ல...!

Samayam Tamil 25 Oct 2019, 11:33 am
தீபாவளி பர்சேஸ்.. புடவை கடையில்....
Samayam Tamil seeing the saree you shouldnt say that tamil funny jokes
Tamil Jokes : சேலையைதான் பார்க்கணுமா...? அதை நீ சொல்லவே இல்ல...!


மனைவி : " இந்த கேட்லாக் பாத்தீங்களா.. இதுல எதாவது நல்லா இருக்கா..? "

கணவர் : " ஒண்ணும்., மூனும் ஓ.கே.. "

மனைவி : " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "

மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க..

மனைவி : " ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க... இது நல்லா இல்ல...? "

கணவர்: " ம்ஹூம்... நல்லா இல்ல..! "

மனைவி : " இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "

கணவர் : " சுமார் தான்....! "

கொஞ்ச நேரம் கழிச்சி..

மனைவி : " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "

கணவர் : " ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..... மூக்கு சப்பையா இருக்கு..! "

மனைவி : " என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? மனைவி முகத்துல ஒரு தீப்பொறி தெரிஞ்சது..

மனைவி : " அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "

கணவர் : " சேலையைதான் பார்க்கணுமா...? அதை நீ சொல்லவே இல்ல....

ஸ்டார்ட் மியூசிக்....

அடுத்த செய்தி