ஆப்நகரம்

Sarakku kadai : மது குடிப்பவர்கள் பலவிதம்..! நீங்கள் எந்த ரகம்!

தமிழ் நகைச்சுவை துணுக்குகள். படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே நம் வாசகர்கள் மீண்டும் படிக்கலாம். கவலையை மறந்து சிரிக்க நகைச்சுவை மட்டுமே!

Samayam Tamil 18 May 2020, 10:37 am
ஆன்லைன் ஆர்டரில் வந்தது
Samayam Tamil Drunk1


சாதாரணமாக குடிப்பவர் - மது வன்பர்

குடித்துவிட்டு தகராறு செய்பவர் - மது வம்பர்

டாஸ்மாக் தொலைபேசி எண் - மது நம்பர்

குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் - மது ஜம்பர்

குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் - மது கம்பர்

எவருக்கும் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர் - மது பங்க்கர்

குடித்துவிட்டு குரங்குச் சேட்டை செய்பவர் - மது பந்த்தர்

வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர் - மது சிந்தர்

உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர் - மது சித்தர்

குடித்தால் மட்டும் பாடுபவர் - மது சிங்கர்

சங்கத்து ஆட்களை கூட்டுச் சேர்த்து குடிப்பவர் - மது சங்கர்

இனி குடிக்கமாட்டேன் என சபதம் எடுப்பவர் - மது நோன்பர்

வேடிக்கை பார்த்து உள்ளே வெம்புபவர் - மது வெம்பர்

எத்தனை ரவுண்டு குடித்தாலும் ஸ்டெடியாக நிற்பவர் - மது தெம்பர்

குடித்து நிறைய உளறுபவர் - மது ரம்பர்

மனைவி ஊருக்கு செல்லும்போது மட்டும் மது அருந்துபவர் - மது பம்பர்

குடித்துவிட்டு தர்மம் செய்பவர் - மது தர்மர்

குடித்துவிட்டு உளறுபவர் - மது சலம்பர்

அடுத்த செய்தி