ஆப்நகரம்

Super Jokes : பணம் கேட்டு கடவுளுக்கு கடிதம் எழுதிய சிறுவன்!

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 15 Oct 2019, 1:22 pm
அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு 50 டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை. கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான்.
Samayam Tamil hqdefault


உறையின் மேல் கடவுள், அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள்.

அந்த கடிதத்தை, ஒரு விளையாட்டாக வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். அதிபருக்கு ஒரே ஆச்சர்யம். “சரி.. இந்த பையனுக்கு உதவுவோம்.

ஆனால் ஒரு சிறு பையனுக்கு ஐம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம்” என்று அனுப்பி வைத்தார். பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை.

நன்றி தெரிவித்து கடவுளுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினான். “ரொம்ப நன்றி கடவுளே.. நான் கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்க.. ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவரைப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல, பாதியை அவங்க திருடிட்டாங்க..

அடுத்த செய்தி