ஆப்நகரம்

ரஜினியை பார்த்து சன்னி லியோன் தேர்தலில் நிற்பாரா?

சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படும் மீம்ஸ்கள் உங்களது பார்வைக்காக...

Samayam Tamil 17 Dec 2020, 6:31 pm
நீயா நானா ஷோ மூலமாக பிரபலமாகியுள்ள இந்த நபர்தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் கண்டெண்டாக மாறியுள்ளார். ஐ போன் வைத்திருந்தாலே தனி கெத்துதான் என்று பலரும் நினைப்பார்கள். அது என்னவோ உண்மைதான். ஆனால், அது எப்போ ஹேங் ஆகி பிரச்சினையை ஏற்படுத்துமோ என்று நினைக்கும் பயனர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
Samayam Tamil file pic


இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றுவருகிறது. போட்டியின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட பிரித்வி ஷா, மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் கிளின் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். சச்சின்-சேவாக்-லாரா கலவையில் பிரித்வி ஷா விளையாடுகிறார் என்று கூறியிருந்த ரவி சாஸ்திரியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஆதரவாகவும், விமர்சித்தும் மீம்ஸ்கள் வளம் வருகின்றன. இந்த நிலையில், ரஜினியின் படத்தை பார்த்தவர்கள் ஒட்டு போட்டாலே அவர் வெற்றி பெறுவார் என்று ஒரு இணையதள செய்தி வெளியானது. அதற்கு, சன்னி லியோன் ரியாக்ஷன் தரும்படியாக தானும் தேர்தலின் நிற்க போவதாக மீமை கிரியேட் செய்துள்ளனர். காரணம், சன்னி லியோனுக்கு தமிழகத்திலும் பல லட்சம் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பராமரிக்கப்படாத பாதாள சாக்கடைக்குள் விழுந்து தாயும், மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுவாக வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அவர்களிடம் அதிகப்படியான அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், சாலைகளை பராமரிக்க தவறும் அரசு ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டால் மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரணையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை மட்டுமே வெளியிடுகிறது என்று பலரும் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் சரிந்து விழாமல் இருக்க நடுநடுவே கயிறு கட்டப்படும். ஆனால், இங்கு ஜல்லி, மணலுக்கு யாரோ கயிறு கட்டி செல்கிறார்கள்.

அடுத்த செய்தி