ஆப்நகரம்

எப்படில்லாம் மீம் போடுறாங்க... உங்களுக்கு அவார்டு கொடுக்கணும்யா

உண்மையை அப்படியே நகைச்சுவையாக விளக்கும் தமிழ் மீம்கள்

Samayam Tamil 29 Nov 2020, 4:01 pm
90 களில் பிறந்தவர்கள் தற்போதைய நவீன உலகில் ஏற்றாற்போல நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு, பல துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். குறிப்பாக கிராம புறங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு ' அந்தக்காலம்' என்ற ஒரு வார்த்தையில் எண்ணற்ற நிகழ்வுகளை ஞாபகமூட்டி வருகின்றனர். அதில் பெரும்பாலான விஷயங்கள் மீம் வாயிலாகத்தான் தற்போது அனைவரும் நினைவூட்ட முடிகிறது. அதுபோல, அப்போதைய காலத்தில் தெருவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் வந்தால் ஓ என்ற சத்ததுடன் அதனை சந்தோஷப்படுத்திக்கொள்வது வாடிக்கை.
Samayam Tamil muthalvan meme



குளிர்காலம் வந்தாலே நாய்களுக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதற்கு, அர்த்தம் என்னவென்றால், மார்கழி மாத குளிரில் நாய்கள் இரவிலும், பகலிலும் தெருக்களில் கூட்டமாக இருக்கும். அது, நாய்களுக்கான இனப்பெருக்க காலம்.


நடிகை காஜலுக்கு அண்மையில்தான் திருமணம் நடந்தது. அவர் தனது தேனிலவை தீவில் கொண்டாட சென்றதாகவும் தகவல் வந்தது. அது தொடர்பான புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி, கடலுக்கடியில் காஜல் தேனிலவை கொண்டாடுகிறார் என்று கூறப்பட்டது. அப்போது, மீன்கள் பரவசம் அடைவதை போல மீமை கிரியேட் செய்துள்ளனர்.


90'ஸ் கிட்ஸ்களுக்காகவே இந்த மீம் உருவாக்கப்பட்டிருக்கும் போல. ஆனால், உண்மையில் பள்ளி காலங்களில் ஒரு பெண்ணுக்கு லவ் ப்ரொபோஸ் செய்த பின்னர், அந்த பெண்ணை பார்க்கும் போதெல்லாம் வைரமுத்துவின் கவிதை தான் ஞாபகத்துக்கு வரும். நவீன வாழ்க்கையில் அதே நைன்டீஸ் கிட் செல்போன் சேட்டிங்கில் காதலை வெளிப்படுத்திவிட்டு, பதிலுக்காக காத்திருக்கும் பரபரப்பு நிமிடங்களை இந்த மீம் விளக்குகிறது.

அடுத்த செய்தி